இரஷியாவும் இந்தியாவும்

கிரீமீ தன்னாட்சி பகுதியை உக்ரைனிடம் இருந்து ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. புதின் உலக நாடுகளுக்குச் சொன்னது, அங்கு உள்ள ரஷ்யர்களை நாங்கள் கைவிட்டு விடமுடியாது என்பதுதான். இது தான் வலிமையான தலைவர் செய்யக்கூடியது அல்லது ஒரு வலிமையான தலைமையிடம் மக்கள் எதிர்பார்ப்பது. இந்தியத் தலைவர்கள் பொதுவாகவே தொடைநடுங்கிகள்.

ஏன் இன்னும் இந்த தொடை நடுங்கி சல்மான் குர்ஷித் ரஷ்யாவை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை, உக்ரைனின் இறையான்மையில் ரஷ்யா தலையிட்டது இந்தியாவின் பார்வையில் உலகநாடுகளின் கடமையில் இருந்து மீறிய செயல் இல்லையா?

ஒபாமா ஒரு சிறு படைப்பிரிவை அனுப்பி பாக்கிஸ்தனுக்குள் ஒசாமாவை சுட்டு வீழ்த்திய பின் இந்திய ஊடகங்கள் சொல்லிக்கொண்டது இந்தியாவும் அது போன்ற சாகசக் காட்சியில் இறங்குமா, தீவிரவாதிகளின் பயிற்சி மையங்களை ஏவுகனை வீசித் தாக்குமா என்றெல்லாம் விடிய விடிய பேசினார்கள்… ஒன்னும் நடக்கவில்லை.

சாதிப்பவர்கள் சாதித்துக்கொண்டிருப்பார்கள், அவர்கள் சாதனையைப் பார்த்து யோசித்துக்கொண்டிருக்கவும் உறுப்படாத வசனங்களை பேசிக்கொண்டிருகத்தான் தான் முடியும் மற்றவர்களால். இது போன்ற உலக விவகாரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு வலிமையான, திடமான முடிவுகளை காலத்தால் எடுக்காவிடில் இந்தியா வெகு விரைவில் ஒரு கடந்த காலமாகிவிடும்.

-பரமன்.

Comments

comments