மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியா 6வது இடம்
Gross Domestic Product என்பது பொருளாதர வலிமையை அளவிடும் ஒரு அலகு. மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் இந்த GDPல் இந்தியா உலகில் ஆறாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது உள்நாட்டு உற்பத்தி, வாணிப பொருளாதார உயர்வை காட்டும் ஒரு உறுதியான அளவீடு. என்ன இருந்தாலும் மக்கள் தொகை, நாட்டின் பரப்பளவு ஆகியவற்றை கொண்டு இவற்றை ஆய்ந்து பார்த்தால் நாம் ஒன்று பணக்காரநாடாகிவிடவில்லை. அதே சமயத்தில் நம்முடைய பொருளாதாரம் எவ்வாறு வளர்ந்துவந்திருக்கிறது, அதுவும் மோடியின் ஆட்சியில் நாம் எப்படி பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கிறோம் என்பதை கீழே உள்ள படம் உங்களுக்கு விளக்கும்.
இத்தனை ஆண்டுகளாக நாம் ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மிகச்சிறிய மற்றும் மிகக்குறைவாகவே மக்கள் தொகையைக் கொண்டநாடுகளை விட உள்நாட்டு உற்பத்தியின் (அமெரிக்க டாலர் அளவில்) மிக மிகப் பின்தங்கி இருந்திருக்கிறோம். தொடர்ந்து தொழில்மயமாக்கல், வெளிநாட்டு முதலீடு, பல்வேறு தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டை அதிகப்படுத்தி அனுமதித்தது, விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவந்தது, இந்திய நாட்டில் உற்பத்தி செய்யவேண்டும் எனக் கட்டாயப்படுத்தியது, இராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்து உற்பத்தியைத் துவக்கியது போன்றவை இதன் காரணிகள் ஆகும்.
தொடர்ந்து இத்தகைய வளர்ச்சிப்பாதையில் இந்தியாவை இட்டுச்செல்ல மோடியினால் மட்டுமே முடியும். அவர் தவிர்த்து வேறு தலைமை ஏதும் தற்பொழுது இந்தியாவில் இல்லை என்றே சொல்லவேண்டும்.