உணர்ச்சியைத் தூண்டும் அரசியல் போக்கு

அரசியல் உள்நோக்கத்தோடு (கேம்பிரிட்ஜ் அனலிடிகா பானியில் ) செய்யப்படும் போராட்டங்கள் ஒன்றும் வெற்றி பெறப்போவது இல்லை. ஒரு உணர்ச்சிப் பூர்வமான பிரச்சனையைக் கையிலெடுத்துக் கொண்டு அதைவைத்து, அந்த போராட்டத்தின் போக்கை வைத்து, தனக்கு மக்கள் ஆதரவு உண்டு என்று காட்டிக்கொண்டாலும், உண்மையில் மக்கள் ஆதரவு நமக்கு சுத்தமாக இல்லை, தேர்தலில் தமக்கு வைப்புத் தொகைகூட கிடைக்காது என்ற உண்மை திமுக-காங்கிரஸ் கூட்டனிக்கு ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலிலேயே தெரிந்திருக்கும்.

சொந்த மக்கள், குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்கவேண்டி எவ்வளவோ போராட்டம் செய்தாலும், டாஸ்மாக் கடைகளையே மூடாத மூடர்கள் (அரசியல் வாதிகள், அதிகாரிகள்), இப்பொழுது போராட்டம் செய்தவுடன் காவேரித் தண்ணீர் மட்டும் வந்துவிடவேண்டும் என்றால் எப்படி?

ஏன் இராகுல்காந்தி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை? ஒரு நாள் மட்டுமாவது தமிழ்நாட்டுக்கு வந்து போராடட்டும் இல்லை புதுதில்லியில் இருந்து ஒரு அறிக்கையாவது வெளியிடட்டும்?

Comments

comments