காங்கிரஸ் அற்ற இந்தியா – தமிழர்களின் முக்கிய கடமையும் கூட.

காங்கிரஸ் அற்ற இந்தியாவை உருவாக்குவது என்பது பாரதீய ஜனதா கட்சியின் முழுமுதற்க் கொள்கைகளில் ஒன்று. அது தமிழர்களின் மிக முக்கியமான கடமையும் கூட. அத்தகைய காங்கிரஸ் அற்ற இந்தியாவை உருவாக்க நாம்  அனைவரும் முயன்று பாடுபடவேண்டியது கட்டாயத் தேவை. கடந்த 2014ல் பதின்மூன்று மாநிலங்களில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸை, ஆட்சியில் இருந்து துரத்தியடித்து இன்று வெறும் மூன்று மாநிலங்களில் மட்டுமே விட்டு வைத்திருக்கிறது பாரதீய ஜனதா, தொடர்ந்து கர்நாடகத்தையும் அதனிடமிருந்து பறிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்தியப் பெருநாட்டிலே, காங்கிரஸ் கட்சியை வேரறுக்க வேண்டிய கடமை உள்ள ஒரே இனம் தமிழினம். தன்னுடைய இரண்டு மலையாளிகளாகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களைக் கொண்டும், இந்திய இராணுவத்தை பயன்படுத்தியும், இராணுவ தளவாடங்களை தந்தும் ஒரு மாட்சிமை பொருந்திய இனத்தை ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து தன்னுடைய பழிவாங்கும் வெறியை தனித்துக்கொண்டவர்களின் குடும்பக் கட்சி இந்த காங்கிரஸ். யாரேனும் ஒரு தமிழன் நான் காங்கிரஸ்காரன் என்று சொன்னால் அவனைவிட மானம்கெட்டவன் யாருமே இருக்கமுடியாது. தன்னுடைய தாய், தந்தை, குழந்தைகளைக் கொன்றவனிடம் பல்லிளித்துக்கொண்டு பிச்சைக்காசுக்காக அவர்களுடைய அடிவருடிக்கொண்டிருக்கும் கேவலமானவர்கள் என்றால் அது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிதான்.

இந்த இனக்கொலையை நான் காங்கிரஸோடு மட்டும் விட்டுவிடுவேன் என்று யாராவது நினைத்தால் அது மிகப் பெரிய தவறு. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது என்றோ இளங்கோவடிகள் சொல்லிவிட்டு சென்றது. எவ்வளவோ ஊழல்கள் செய்தவராக இருந்தாலும், ஊழல் குடும்பத்தையே தன்னோடு வைத்துக்கொண்டு இந்த தமிழகத்தை கட்டியாண்ட ஜெயலலிதாவிற்கு, ஏன் இரண்டாவது முறையாகவும் மக்கள் வாக்களித்தார்காள்?

ஊழல் செய்தாலும் பரவாயில்லை, தன்னுடைய குடும்பத்தின் அதிகார ஆசைக்காக தன் முதுகுக்குப் பின்னே தன் இனம் அழிந்துகொண்டிருப்பதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், சோனியா காந்தியின் முன்பு பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர்கள் நம்மை மீண்டும் ஆண்டால் அதைவிட நாம் நமக்கு உண்டாக்கிக்கொள்ளும் அவமானம் வேறு எதுவுமே இருக்கமுடியாது என்று வெகுண்டெழுது அளித்த வாக்குகள் அது.

ஆகவே என்னதான் அரிதாரம் பூசிக்கொண்டு வெளியில் வந்தாலும் இந்த துரோகத்தை திமுகாவால் எந்த ஒரு திராவகத்தைக்கொண்டும் கழுவிவிடமுடியாது. இத்தனையாண்டுகளாகியும், தமிழினத்திடம் மனமுவந்து தன்னுடைய தவறிற்கு ஒருமுறை கூட மன்னிப்புக்கோராத திமுக, தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை தன்னோடு கூட்டனி சேர்த்துக்கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்டு வருவது ஒரு இழிசெயல்.

காங்கிரஸற்ற இந்தியாவை உருவாக்குவது பாரதீய ஜனதாவிற்கு மட்டுமல்ல தமிழர்களாகிய நம்முடைய முக்கிய கடமையும் கூட.

பரமன்

Comments

comments