காங்கிரசின் அடுத்த ஆயுதம் மொழிப் பிரிவினைவாதம்

என்னுடைய பழைய கட்டுரை ஒன்றில் இந்தியா, மக்களாட்சியில் (Democracy) இருந்து பெயர்ந்து பேரினவாத ஆட்சியில் (Majoritarianism) நிலைகொண்டுவிட்டது என்று எழுதியிருந்தேன். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எந்த தேர்தலிலும் காங்கிரசோ அல்லது மற்ற கட்சிகளோ வெல்லமுடியாமல் போனதற்கு அதுவே முக்கிய காரணம். (சிறுசிறு தேர்தல் வெற்றிகள் தவிர). பலவிதமான பிரிவினர்களைக் கொண்ட இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருப்பது மதப்பெரும்பான்மையின ஆட்சி. இந்திய விடுதலைக்குப் பிறகு பெரும்பான்மை இந்துக்கள் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு ஒருமுகமாக பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் இதற்கு இந்திய அரசியல் கட்சிகளின் இரண்டு முக்கிய செயல்பாடுகளே காரணம் அவை,

  1. பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்ந்த இந்து ஒருமைப்பாட்டு முயற்சி
  1. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தொடர்ந்து சிறுபான்மையின மக்களை திருப்திபடுத்தி (Minority Appeasement) அவர்களை தங்கள் கட்சியின் ஓட்டு வங்கியாக பயன்படுத்திக்கொண்டுவந்தது.

இந்த இரண்டு முக்கிய செயல்பாடுகளுமே இருதியில் ஒரே முடிவை எட்டவே உதவின, அது பெரும்பான்மை இந்துக்களை பாரதீய ஜனதா கட்சியின்பால் திருப்பியதே. பெரும்பான்மையின ஆட்சி என்று வந்துவிட்டால், மக்கள் சிறுபான்மை பெரும்பான்மை என்று பிரிந்துவிட்டால் இனி சிறுபான்மையினத்திற்கு மக்களாட்சியில் வெற்றி என்பதே கிடையாது.

(சிங்கள பேரினவாத ஆட்சியை நாம் இங்கு நினைவுகூறவேண்டும் அங்கு தமிழ் சிறுபான்மையினர் வெல்வது என்பது முடியாத காரியம். அங்கு மக்கள் மொழிவாரி பெரும்பான்மை சிறுபான்மை என பிரிந்துகிடக்கிறார்கள்)

அதனால் தான் பாரதீய ஜனதா கட்சி இந்தியாவின் பத்தொன்பது மாநிலங்களில் ஏற்கனவே தன்னுடைய ஆட்சியை நிறுவிவிட்டது, பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன, மதசார்பற்ற பொது சிவில் சட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது, காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன.

மீளமுடியா ஒரு மரண எல்லையில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி கடந்த குஜராத் தேர்தலில், இந்த பேரினவாத ஒற்றுமையை உடைப்பதற்காக சாதிகளை, சாதிகளில் கிழ் மேல் என்று மக்களை துண்டாடுவது மட்டுமே ஒரே வழி என்றுணர்ந்து, அவ்விதமே தாழ்த்தப்பட்டவர்கள், படேல்கள் போன்ற சாதியினரை பிரித்து தன்பக்கம் இழுத்தது. ஆயினும் இந்த துண்டாடல் அதற்கு தேவைப்பட்ட பலனைத் தரவில்லை.

சாதிவாரியாக மக்களைப் பிரித்தால், சில சாதிகள் நமக்கு வாக்களித்தால் பிற சாதிகள் எதிரிக்கு மொத்தமாக வாக்களிப்பார்கள் என்பது இயற்கை. ஆகவே இம்முயற்சியில் இனிமேலும் நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கப்போவது இல்லை. தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தின் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எப்படி இந்த பேரினவாத வெற்றியை வீழ்த்துவது? ஏற்கனவே பல மதம் சார்ந்த பிரச்சனைகளில் மூழ்கிக் கிடக்கும் கர்நாடக மக்கள் பிரிந்துகிடக்கிறார்கள் இந்துக்கள் பெரும்ப்பன்மையாக பாரதீய ஜனதாவிற்கு வாக்களிக்கப் போவது உறுதியாகிவிட்ட நிலையில்

காங்கிரஸ் கையில் எடுக்கப்போகும் மிகப்பெரிய ஆயுதம்மொழிவாரி பிரிவினை

பொருத்திருந்து பாருங்கள்

பரமன்

Comments

comments