இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது நீதிமன்றங்களே…

மோடி அரசு என்னதான் ஊழலை ஒழிப்பதில் அக்கரை காட்டினாலும், மோடி மக்களுக்கு வாக்களித்தது போல, ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்த பாடில்லை. இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில், லாலு மாட்டுமே ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மற்ற ஊழல்வாதிகள் இந்தியாவின் வளர்ச்சிக்கே சாபக் கேடாக விளங்கும் நீதிமன்றங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி இதுவரை தப்பித்து வந்துகொண்டிருக்கின்றனர். உழல் செய்வது எளிதாகவும், அந்த ஊழலை கண்டுபிடித்தாலும், அதனை நீதிமன்றங்களில் நிரூபணம் செய்து அவர்களை தண்டிப்பது என்பது ஒரு இமாலயப் பணியாகவே இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் ஊழலுக்கு தண்டனை பெற்ற அரசியல் வாதிகள் மிகச்சிலரே. கடந்த மாதம் கூட எட்டு வருடமாக விசாரனை செய்த சிபிஐ நீதிமன்றம், தண்டிப்பதற்கு போதுமான ஆதரங்கள் இல்லை என்று அலைக்கற்றை ஊழலில் சிக்கியவர்களை விடுவித்தது. சிறப்பு சிபிஐ நீதி மன்றங்களின் அவலநிலையே இப்படி என்றால் கீழ்நிலை நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஊழலின் ஊற்றுக்கண்ணே நீதிதுறைதான். இதே நீதிமன்றம்தான், குற்றம் சட்டப்பட்டவர்களை (கனிமொழி, இராஜா மற்றும் பலர்) சிபிஐ பொருப்புக்கு விட்டதும், அவர்களை மாதக் கணக்கில் நீதிமன்றக் காவலில் வைத்திருந்ததும், அவர்ளின் மீது சாட்டப்பட்ட குற்றத்தை எட்டு ஆண்டுகளாக விசாரனை செய்ததுமாகும்.  இதற்காகச் செலவு செய்யப்பட்ட பலகோடி மக்களின் வரிப்பணத்தை விழலுக்கு இரைத்ததற்குப் பிறகும் தண்டிக்க ஆதாரம் இல்லை என்று தீர்ப்பளித்தால் இதனை எவ்வாறு நாம் நம்ப முடியும்? தண்டிக்க ஆதாரம் இருக்கிறதா என்று பார்க்க எட்டு ஆண்டுகளா? இத்தகைய நம்பகமற்ற செயல்பாடுகளால் மக்கள் நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையை பெரிதும் இழதுவிட்டனர்.

இன்று கார்த்தி சிதம்பரத்தை இதே சிபிஐ நீதிமன்றம் விசாரனைக்கு சிபிஐயின் பொறுப்பில் விட்டுள்ளது, இவரை கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு சேர்த்து விசாரனைக்கு எடுப்பதற்கு சிபிஐ போன்ற அதிகாரம் பொருந்திய விசாரனைத்துறையே திணறிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் சாதராண மனிதனுக்கும், செல்வத்திலும் அதிகாரத்திலும் கொழிக்கும் அரசியல் வாதிக்கும் நீதி என்பது முற்றிலும் வேறுபட்டது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

இந்த சமயத்தில் பொறுத்திருந்து பார்ப்பது மட்டுமே நம்மாலாகக் கூடியது.

பரமன்

Comments

comments