பல அரசியல்கட்சிகளை செல்லாக்காசாக்கிய மோடி

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசாக்கி மோடி அரசு ஆணையிட்டபிறகு, பொதுவாக அனைத்து எதிர்க்கட்சிகளுமே முன்வைத்த முக்கிய குற்றசாட்டு என்னவென்றால் “ஏழைகள் பாதிக்கப் படுகிறார்கள், ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள், பணக்காரர்கள் ஒருவர் கூட கஷ்டப்படவில்லை, கருப்புபணம் வைத்திருப்போர் சிரிக்கிறார்கள், ஏழைகள் அழுகிறார்கள்” என்ற ரீதியில் அடுக்கிகொண்டே போனார்கள்.

1. பணக்காரர்கள் எதற்கு கஷ்டப்படவேண்டும், அவர்களுக்கு வேலை பார்க்க ஆள் இருக்கிறார்கள், பணம் இருக்கிறது, கருப்புப் பணம் இருந்தாலும் கூட வெள்ளைப்பணமும் வைத்திருப்பார்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித கஷ்டமும் இதனால் ஏற்பட போவதில்லை.

2. கோடிக்கணக்கில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், மோடி அரசு ஆணையிட்டுவிட்டதால், அப்படியோ கொண்டு போய் எல்லா கருப்புப்பணத்தையும் ஆற்றில் எறிந்துவிடுவார்களா அல்லது தீயிட்டு எரித்துவிடுவார்களா? நீங்களோ, நானோ அவ்வளவு பணம் வைத்திருந்தால் என்ன செய்வோம்? போகட்டும் என்று தூக்கி எறிந்துவிடுவோமா?

3.எப்படியாவது ஒரு வழியில் நம்முடைய பணமனைத்தையும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றாமல் உறங்கமாட்டோம். அது தான் இப்பொழுது இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. வங்கிகளின் மேலாளர்கள், ஊழியர்களின் தயவில் பல கோடிகள் மாற்றப்பட்டுவிட்டது. அதற்காக இந்த திட்டத்தை கொண்ட வந்த மோடி அரசை குறைசொல்லவேண்டியதில்லை, எத்தனுக்கு எத்தன் இந்த வையத்தில் இருப்பான். பதுக்குபவன் பதுக்கிக்கொண்டே இருக்கட்டும், அவனை விரட்டி விரட்டி தாக்குவதும் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

4. இப்பொழுது எல்ல பரிவர்தனையும் வங்கி வழி நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, பல வழிகளில் அரசு கருப்புப்பணம் வைத்திருப்போரை குறிவைத்து பிடித்துக்கொண்டிருக்கிறது. இது தொடரவேண்டும். எலக்ட்ராணிக் வழி பணப்பரிவர்தனைகள் நீண்டகால பலனளிக்கக்கூடியவை. ரேசன் கடைகளில் நமது வங்கியிலிருந்து இணையம் வழி பணம் செலுத்தினால் கூடுதல் பணம் வசூலிக்கும் கும்பலால் ஏதும் செய்யமுடியாது.

5. மோடி கொண்டுவந்த இந்த திட்டத்தினால் பல பலன்கள் உண்டு. ஆரம்பத்தில் மோடி அதைப்பற்றி அறிவிக்கவிடினும் மறைமுகமாக பலதரப்பட பலனை நாட்டிற்குத் தரவல்லது இந்த திட்டம். கருப்பு பணக்குறைப்பு (அழிப்பு என்று சொல்லமாட்டேன்), போலி நோட்டுகள் ஒழிப்பு, தீவிரவாத பண்ப்பட்டுவாடு குறைப்பு, வங்கி வழி பணப்புழக்கம், சேமிப்பு பணம் வங்கிக்கு வருவதால், அவை தொடர்ந்து பல வழிகளில் அதாவது குறைந்த வட்டியில் கடனாக, அரசுக்கும் தனியாருக்கும் கிடைக்கும் அதனால் தொழில் மற்றும் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

6. இந்த திட்டத்தில் ஒரு முக்கிய கட்டம் என்னவென்றால், அரசியல் வாதிகள் அதிகம் எதிர்க்கிறார்கள், மக்கள் அதிகம் ஆதரிக்கிறார்கள் அரசியல் வாதிகளைப் பொருத்தவரை மக்கள் கஷ்டப்படக்கூடாதென்ற கரிசனம் அவ்வளவே.

–பரமன்.

Comments

comments