பரம்பரை அரசியல்

 

கடந்துபோய்விட்ட காலத்தின் அழிக்கமுடியாத பதிவுகளை களைந்து நோக்கும்போல், ஒருவன் தன்னை அரசனாக முடிசூட்டிக்கொள்ள அவனுக்கு என்னென்ன தகுதிகள் என்று ஆய்ந்து பார்த்தோமானால், அவன் வீரனாக, நீதியை நிலைநாட்டுபவனாக, சிறந்த நிர்வாகியாக, மக்களுக்குத் தேவையானதை அவர்களது மனதறிந்து நிறைவேற்றுபவனாக, நாட்டின் படைகளை வழிநடத்தி பகையினை புறம் கண்டவனாக என்று எண்ணற்ற அடைமொழிகளோடு கூடிய தகுதிகளை நாம் வரலாற்றின் இலக்கியப் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டிக்கொண்டே போகலாம்.

ஆனாலும் இவையனைத்தும் இருந்தும், ஒரு முக்கியமான தகுதி அவனுக்கு இல்லையென்றால் அவனால் அரசனாக, ஏன்? அரியாசனத்தின் அருகில் அமர்வதைக்கூட கற்பனை செய்துபார்க்க முடியாது என்றால் அதுதான் மன்னர் மரபு வழி என்ற அரச பரம்பரை. (இராஜவம்சம், Royal Blood என்ற பாரம்பரீயம்)

இத்தகைய பரம்பரை இரத்தம் ஓடாதவனுக்கு அரசனாக உரிமையில்லை அது போலத்தான் இத்தகைய பரம்பரை ரத்தம் ஓடுபவனுக்கோ அரசனாவது தவிர வேறு எந்த ஒரு பதவியிலும் ஒட்டிக்கொள்ள விருப்பமில்லை, அது தேவையுமில்லை அது அவனுடைய பரம்பரைக்கு இழுக்கு. இவ்வாறு பரம்பரை ரத்தம் ஓடுபவனுக்கு நாம் மேற்கூறிய அடைமொழிகளோடு கூடிய வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை, ஆனால் பரம்பரை ரத்தம் ஒன்று மட்டும் போதும் நான் அரசாள்வதற்கு என்று காலப் பதிவுகளை மட்டும் ஆதாரமாக்கி ஆணித்தரமாகச் சொல்வதுதான் இன்று நாம் காணும் நிகழ்காலப் பரம்பரை அரைசியலின் உச்சகட்ட கேலிக்கூத்து.

பரமன்.

Comments

comments