மண்ணாகிப் போகும் பத்திரிக்கை தர்மம்

மண்ணாகிப் போகும் பத்திரிக்கை தர்மம்

கடந்த 23 ஆம் தேதி (23/11/2013) டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தி “பாபா ராம்தேவ் பதஞ்சலி விடுதியிலிருந்த டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் மாயம்”.

இந்த செய்தியில் பாபா இராம்தேவினுடைய படம் மற்றும் பதஞ்சலி விடுதி பாபா ராம்தேவால் நடத்தப்படுகிறது என்ற செய்தியும் இடம்பெற்றிருந்தது.

இந்தச் செய்தியைப் படித்த மாத்திரத்தில் பாபா ராம்தேவ் தன்னுடைய கல்லூரியில் படிக்கும், விடுதியில் தங்கியிருக்கும் இளம்பெண்ணைக் கடத்திவிட்டார் என்று தோன்றுமளவிற்கு செய்தியை வெளியிட்டிருந்தது அந்த பத்திரிக்கை. ஆனால் உண்மையில் அந்த செய்தியின் சாரமே அவ்விளம்பெண்னும் ஒரு இளைஞனும் அடிக்கடி சந்தித்து வந்தனர், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளுவதாக முடிவு செய்திருந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர், அந்தப் பெண் மாயமான அன்று அவ்விளைஞனும் விடுதிக்கு வந்திருந்தார் என்பதுதான்.

இத்தகைய ஒரு சாதாரமாண செய்தியை, இன்றைய பரபரப்பான அரசியல் சூழலைப் பயன்படுத்தி எவ்வளவு கீழ்தரமாக செய்திவெளியிடமுடியும் என்று காட்டியதற்கு இச் செய்தி ஒரு உதாரணம்.

தன்னுடைய கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் பெண் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டாள்… எவ்வளவு கேவலமானவர் பாருங்கள் இந்த பாபா ராம்தேவ் என்று சொல்வது போலிருந்தது அந்த செய்தி.

இதே டைம்ஸ் ஆப் இந்தியா, இதற்கு முன்பு தவறுதலாக ஊழல் செய்த நீதிபதிக்குப் பதிலாக வேறொரு நீதிபதியின் போட்டோவை தன்னுடைய தொலைக்காட்சியில் காட்டி 100 கோடி ரூபாய் அபராதம் கட்டிய பெருமைக்குறியது.

-பரமன்

Comments

comments