GITEX எனும் தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி

துபாயில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் GITEX என்னும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சி மிகவும் பிரபலமானது. அந்தக் கண்காட்சியை ஒட்டி, புதிய தகவல் தொழில்நுட்பங்களும், மின்னனு சாதனங்களும் பார்வைக்கு வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மிக மலிவான விலைக்கு விற்பனைக்கும் வைக்கப்படும். அதற்கென்றே தனியாக இடங்களை ஒதுக்கி அங்கே விற்பனை அங்காடிகளை அமைத்து விற்பனை செய்கிறார்கள். அந்த விற்பனை அங்காடிகளுக்குச் செல்வதற்கே பணம் செலுத்து நுழைவுச் சீட்டு பெற்றாக வேண்டும்.

GITEX கண்காட்சியைப் பொருத்தவரை இரண்டு நிகழ்வுகள் உண்டு. ஒன்று கண்காட்சி, மற்றொன்று விற்பனை. இந்த கண்காட்சியைப் பொருத்தவரையில் இது மக்களிடையை தனது பிரபலத்தை இழந்துவருகிறது. அதற்கு மாற்றாக விற்பனை தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது. கடந்த வருடங்களில் பல பெரிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னனு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொள்வதில் இருந்து ஒதுங்கிக்கொண்டன, ஆனால் இந்த கண்காட்சியின் மற்றொரு அங்கமான விற்பனை, அதுவும் தள்ளுபடி விலை, விலை குறைப்பு என்று பல சலுகைகளை அறிவிப்பதால் மக்களிடைய சூடு பிடித்து வருகிறது. இந்த வருடத்திலிருந்து இந்த கண்காட்சியின் விற்பனை நிகழ்வை (GITEX SHOPPER) மட்டும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த அரசு முடிவு செய்து தற்பொழுது நடந்து வருகிறது. மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று பார்த்து அவர்கள் தேவையைப் பூர்த்திசெய்வது தான் சிறந்த அரசு.

Comments

comments