H1N1 – கொஞ்சம் வயித்தக் கலக்கிற சமாச்சாரம்தான்

கொஞ்சம் வயித்தக் கலக்கிற சமாச்சாரமாத்தன் இருக்கு இந்த H1N1 கிருமிகளால் பரவக்கூடிய காய்ச்சல். இன்றைக்கு பூனா நகரில் ஒரு 14 வயது சிறுமி இக்காய்ச்சலால் கட்டுண்டு இறந்திருக்கிறாள். இது இந்தியாவில் சம்பவித்திருக்கிற முதல் பலி. மருத்துவ நிபுணர்கள் இன்னும் இரண்டு வருடங்களில் இருநூறு கோடிப் பேர்களுக்கு இந்தக் காய்ச்சல் பரவும் என்று கணித்திருக்கிறார்கள்இந்த நோய்க்கிருமிகளை எதிர்கொள்ள இதுவரைக்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றே தெரிகிறது.

இந்தியா போன்ற மக்கள் அடர்த்திமிக்க, சுகாதாரம் குறைந்த சூழல் நிறைந்த நாடுகளில் இந்நோயின் தொற்று அளவிடமுடியாத அளவில் பெருகிக்கொண்டேபோகும் என்பதில் இதுவரை எந்த சுகாதார நிறுவனத்திற்கும் மாற்றுக் கருத்து இல்லை. இன்றுவரை இந்நோய்க்கிருமிகள் ஐந்து அவதாரங்களை எட்டியுள்ளதாக தங்களுக்குக் கிடைத்த கிருமிகளின் மாதிரிகளைக் கொண்டு உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது போன்று எத்தனை அவதாரங்களை திடீர் மாற்றம் (Mutation) மூலம் (இப்பன்றிக்காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டு பின்னர் H1N1 என்று பெயர் மாற்றப்பட்ட) இவ்வைரஸ் கிருமிகள் எடுக்குமோ என்பதுவும் புரியாத புதிர்.

இரண்டாயிரத்து இருபதுக்குள் இறந்தவர்களை உயிர்ப்பித்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில் ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கும் அறிவுச் சமூகம் இன்னும் நம்பிக்கையான பதில்கள் எதையும் இந்நோய்க் கிருமிகளை அடக்கவல்ல முயற்சியில் அறிவிக்கவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Comments

comments