ஆன்மீக தலங்களை மேம்படுத்தும் பிரதமர் மோடி

பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஹிந்து தர்ம அமைப்புகளுக்கு சாதகமான மற்றும் வசதியான சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். பாரதத்தை மையமாகக் கொண்ட எல்லா சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளின் தர்மங்களிலிருந்து, மடாதிபதிகளும், அமைப்புகளும் பிரதமர் மீது மிகுந்த அன்பையும் மரியாதையையும் செலுத்துவதற்கு இதுவே காரணம்.

ஸ்ரீ கேதார்நாத் மற்றும் ஸ்ரீ பத்ரிநாத் திருக்கோவில்களின் மறுவடிவமைப்பு, ஸ்ரீ காசி விஸ்வநாத், இராமேஸ்வரம் முதற்கொண்டு அனைத்து நாட்டிலுள்ள ஆன்மீக தலங்களை முறைப்படுத்தி ஆன்மீக சுற்றுலா கலாச்சாரத்தை புதுப்பிப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறார்.

பிரதமர் தலைமையிலான மத்திய அரசுயாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக மேம்பாட்டு இயக்கம் ‘பிரசாத்’ போன்ற திட்டங்கள் மூலம், நமது ஆன்மீக இடங்களில் வசதிகளை திட்டமிட்ட முறையில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது.

நம்முடைய ஆன்மீக தலங்களுக்கு எளிதில் அணுகுவதற்கான உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. அயோத்திக்கு புதிய நெடுஞ்சாலைகளையும், விமான நிலையம், புல்லட் இரயில், தனுஷ்கோடி வரைக்கும் உயர்தர நெடுஞ்சாலைகள், இமயம் முதல் குமரி வரை அனைத்து வானிலைகளிலும் போக்குவரத்து பாதிக்காத சாலைகளும் பக்தர்கள் நமது தீர்த்தஸ்தானத்தை அடைவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இங்கு நாம் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறோம். முக்கியமான உண்மை என்னவென்றால், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஒரு தார்மீக அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மையத்தில் வந்துள்ளது. இது நமது ஆன்மீக மரபுகளுக்கு புத்துயிர் அளிக்கிறது. அயோத்தியை ஆன்மீக ஸ்மார்ட் நகரமாக மேம்படுத்துவது, தீர்ப்புக்குப் பிறகு ஸ்ரீ ராமர் ஜன்மபூமி மந்திர் கட்டுமானத்தின் அனைத்து தடைகளையும் நீக்கியதும் பிரதமரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.

இராமர் கோவில் உட்பட்ட அனைத்து ஆன்மீக தலங்களின் கட்டுமானங்கள் பற்றிய அவரது வழக்கமான விசாரனைகள், அவைகள் ஒருபோதும் தாமதமாகிவிடக்கூட்டது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதில் வெளிநாடுகளில் கட்டப்பட்டுவரும் கோவில்களும் அடக்கம்.

இதன்காரணமாக நமது பிரதமர், நமது வணங்கத் தக்க சந்நியாசிகள், மற்றும் ஆன்மீகத் தலைவர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் பாசத்தையும் பெற்று வருகிறார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் பல்வேறு சாதுக்களின் வருகையால் புனிதமடைந்திருக்கிறது. இது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நாம் கேள்விப்பட்டிராதது.

Comments

comments