கருணாநிதி = மன்மோகன் சிங்

தனது சொந்த மக்களுக்கே துரோகம் செய்துதான் இந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கால் தமிழர்களுக்கு என்ன நன்மை செய்துவிடமுடியும்?

தான் சந்தித்த ஒரே ஒரு தேர்தலிலும் (1999 மக்களவைத் தேர்தல்) அதிலும் சீக்கியர்கள் அதிகம் வாழும் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவரால் வெற்றி பெறமுடியவில்லை ஏன் தெரியுமா?

1984ல் சீக்கியர் படுகொலை செய்யப்பட்டதில் காங்கிரஸின் பங்கை மறுத்துப் பேசியவர் மன்மோகன் சிங். அரசியலில் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் தன்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களையே வெட்டிவீழ்த்தியவர்களோடு கைகோர்த்திருந்த மன்மோகன்சிங் சீக்கியர் படுகொலைக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் தான் என்று மாற்றிவிட முற்பட்டவர். இத்தகை இன துரோகியை தேர்ந்தெடுக்க சீகியர்கள் ஒன்றும் முட்டாள்களாக இருந்திருக்கவில்லை. இப்பொழுது தெரிகிறதா இவருக்கும் கருணாநிதிக்கும் என்ன ஒற்றுமை என்று?

நாட்டைப் பற்றி கவலைப்படாமல் சொந்தக் கட்சிகாரர்களும், கூட்டணிக் கட்சிகாரர்களும் ஊழல் செய்து பணத்தைச் சுரண்ட துணை நின்றது மன்மோகன் சிங். நாட்டை பற்றிக் கவலைப்படாமல், தமிழ் இனம் இலங்கையில் அழிந்துகொண்டிருந்ததைப் பற்றியும் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சொந்தக்காரர்களுக்கு பணத்திற்காகவும், பதவிக்காகவும் வீழ்ந்துகிடந்தது கருணாநிதி.
பரமன்.

Comments

comments