பாதுகாப்புக் கேமராக்கள் பொருத்துபவர்கள் கவனிக்கவேண்டியவை

வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு பாதுகாப்புக் கேமராக்கள் பொறுத்தும்பொழுது பலர், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கவேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அதனாலேயே கேமரா நிறுவனங்களும் அவர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கும் பொருட்டு விலை மலிந்த பொருட்களையும், தரத்தில் குறைந்த தொழில்நுட்பத்தையும் வழங்குகிறார்கள்.

ஹர்ட் டிஸ்க் (Hard Disk)

பாதுகாப்புக் கேமராக்களின் வீடியோ பதிவுகள் அதில் பொருத்தப்பட்டுள்ள ஹர்ட் டிஸ்கில் பதியப்படுகின்றன. இந்த ஹர்ட் டிஸ்க்குகள் 500GB, 1TB, 2TB… 8TB என்று பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இந்த ஹர்ட் டிஸ்க்குகளில் பலவகைகள் உண்டு. கணினியில் பயன்படுத்துபவை, பாதுகாப்புக் கேமராக்களுக்குப் பயன்படுத்துபவை, விளையாட்டு கணினிகளில் பயன்படுத்துபவை மற்றும் பல.

இதில் கணினியில் பயன்படுத்தப்படும் ஹர்ட் டிஸ்க்குகளையும் நாம் பாதுகாப்புக்கேமராக்களுக்குப் பயன்படுத்த முடியும். கணினியில் பயன்படுத்தப்படும் ஹார்ட் டிஸ்க்குகள் சரிபாதி (50%-50%) எழுதுவதற்கும் (Writing), அவற்றில் இருந்து தகவல்களை எடுப்பதற்கும் (Reading) ஏற்றவகையில் தயாரிக்கபப்டுகின்றன. ஆனால் பாதுகாப்புக் கேமராக்களைப் பொறுத்தவரையில் கூடுமான வரையில் வீடியோக்கள் ஹார்ட் டிஸ்க்குகளில் பதிவாக (Writing) மட்டுமே செய்கின்றன. மிகக் குறைந்த நேரங்களில் மட்டுமே நாம் பதிவில் இருக்கும் வீடியோக்களை பார்க்கிறோம் (Reading) அதனால் இத்தகைய ஹார்ட் டிஸ்க்குகள் 90% எழுதுவதற்கும் (Writing) 10% Readingக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றன்.

சந்தையில் பயன்படுத்தப்படும் 500GB Hard Diskக்குகள் பெரும்பாலும் கணினியில் பயன்படுத்தப்படுபவை மட்டும். அவை மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. தோராயமாக 500GB Rs.1500க்குக் கிடைக்கின்றன. ஆனால், பாதுகாப்புக் கேமராக்களில் பயன்படுத்தப்படும் 1TB Surveillance Hard Disk ரூபாய் 3500க்கும் கிடைக்கின்றன. (பாதுகாப்புக்கேமராக்களுக்குப் பயன்படுத்தப்படும் 500GB hard diskகுகள் இல்லை. 1TBயிலிருந்துமட்டுமே தொடங்குகிறது.)

ஆனால் பலர் 500GB hard disk க்குடன் ரூபாய்.12500க்கு கேமராக்கள் பொருத்துவதற்கு தயாராக இருக்கிறார்களேயொழிய ரூபாய் 2000 கூடுதல் செலவு செய்து மூன்று வருட உத்திரவாதத்தில் கிடைக்கும் பாதுகாப்புக்கேமராக்களுக்கே உரித்தான ஹார்ட் டிஸ்க்குகளை வாங்குவதற்கு விரும்புவதில்லை. பலருக்கும் இந்த தொழில்நுட்ப ரீதியிலான வேறு பாடுதெரியாமல் இருப்பதே இதற்குக் காரணம். அதுமட்டுமல்லாது அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படாததும் ஒரு தலையாய காரணம்.

பரமன்.

Comments

comments