தீக்குறளைச் சென்றோதோம்!ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையில் இரண்டாவது பாடல் ‘வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு’ என்று தொடங்கும். இப்பாடலில் பாவை நோன்பு நோட்கும் பெண்டிர் ஒரு மாதத்திற்கு (நோன்புக் காலம்) என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது (DOs and DON’Ts) என்பதைப் பட்டியலிட்டிருக்கிறார்.

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ

செய்யக்கூடியது
“நாட்காலே நீராடி, பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, ஐயமும், பிச்சையும் கொடுத்து”

செய்யக்கூடாதவையாக
“நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம், செய்யாதனச் செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்”

இதில் தீக்குறளைச் சென்றோதோம் என்பது திருக்குறளை என்று யாரோ ஒரு நாத்திக முட்டாள் மொழிபெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தீக்குறள் என்றால் கெட்டவார்த்தைகள், பேசத்தகாத சொற்கள், பிறர்மனம் நோக திட்டுதல் என்று பொருள். அத்தகைய சொற்களை பயன்படுத்தோம் என்பதுவே அவருடைய கட்டளை. அதைவிடுத்து ஆண்டாள் திருக்குறளை ஓதக்கூடாது என்று சொன்னதாக நாத்திகப் பதர்கள் கிளப்பிவிடுவது அவர்களுடைய முட்டாள்தனத்தையே காட்டுகிறது.

பாவை நோன்பு நோற்பதற்கு ஆண்டாள் முதலில் ஆயர்பாடிப் பெண்டிர்க்கு மட்டுமே அறிவுரை செய்தார்.

“மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!”

என்றழைத்து. பின்னர் இரண்டாவது பாட்டில் “வையத்து வாழ்வீர்காள்” என்று உலகில் வாழும் அனைத்தும் பெண்டிரையும் சேர்த்துக்கொண்டார். பெண்டிர்கள் எல்லாம் காலையில் எழுந்ததும் பொதுவாக திருக்குறளை ஓதிக்கொண்டிருந்தார்களா என்ன? நோன்பு நாட்களில் அதைச் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு?

-பரமன்

Comments

comments