அரசியல் திராணியற்ற காங்கிரஸ்
கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற கொடூரக் குற்றங்கள் மனித சமூகத்தில் மலிந்துகிடப்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் சராசரியாக 89 கற்பழிப்புக் குற்றங்கள் நாடுமுழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த குற்றங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு அரசியல் செய்து மக்களிடம் செல்வாக்குப் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது. மோடி அரசின் எந்த திட்டத்திற்கும் எதிராக அரசியல் செய்ய காங்கிரஸ் கட்சிக்கு திரணியில்லை காரணம் ஒவ்வொன்றும் பொன்னான மக்கள் நலத் திட்டங்கள். அதனால் ஆங்காங்கு நடக்கும் குற்றசம்பவங்களை வைத்து அரசியல் செய்தாவது மக்களிடம் செல்வாக்குப் பெற காங்கிரஸ் நினைப்பதில் தப்பில்லை. இராமராஜ்யத்தில் கூட காமக்கொடூரர்கள் கற்பழிப்புச் சம்பவங்களை அரங்கேற்றிக்கொண்டுதானிருப்பார்கள், அவர்களை அரசு தண்டித்துகொண்டுதானிருக்கும். யோகி அரசும் இதற்கு விதிவிலக்கல்ல.