தனியார் பள்ளிகள் – மன அழுத்தம் தரும் பாடச்சுமை

காலை ஆறு மணிக்கு கிளம்பி, இரவு ஏழுமுப்பதுக்கு வீட்டிற்கு வரும்பொழுது ஆறு படிப்பத்துறை (Subject) களிலிருந்தும் வீட்டுப்பாடங்கள்.

ஆசிரியர்களுக்கிடையில் வீட்டுப்பாடங்கள் கொடுப்பதில் ஒரு ஒருங்கிணைப்பு, ஒத்திசைவு இருக்கிறதா என்று தெரியவில்லை. மனம்போன போக்கில் சில ஆசிரியர்கள் தரும் வீட்டுப்பாடங்கள் கடுமையாக நேரம் எடுத்துக்கொள்பவையாக இருக்கின்றன. அவற்றை முடிக்காமல் போனால் திட்டுவாங்க நேரிடலாம், வகுப்பில் அவமானப்பட நேரிடலாம். ஆக, படிப்பு, பாட்டு, விளையாட்டு என்று எங்கனம் வழக்கப்படுத்திக்கொள்ளமுடியும்?

இந்த ஆறு படிப்பத்துறைகளின் புத்தகங்களை ஒரு வருடத்தில் பயில எதற்கு தினசரி பதிமூன்று மணி நேரங்கள் (வீட்டுப்பாடம் தவிர்த்து)? படிப்பதை எளிமைப்படுத்துவதை விடுத்து அவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தை அளிக்கும் வகையில் பள்ளிகள் செயல்படுவதின் காரணம் அவை தொழில்மயமாக்கப்பட்டதால்தான்.

அரசு கடுமையான சட்டங்களை இயற்றி பள்ளியின் படிப்பு நேரத்தை முறைபடுத்தவேண்டும்

Comments

comments