இடதுசாரிகளின் பொய் ஊடகப் பிரச்சாரமும் – இஸ்லாமியர்களும்

சமீபத்தில் நான் இட்ட பல பதிவுகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதம் சார்தவைகளாக இருந்தன. பொதுவாக இத்தகைய பதிவுகளைத் தவிர்க்கும் நான், இவைகளைப் பதிந்ததின் காரணம், மதசார்பற்ற நடுநிலையான நண்பர்கள் பலர் மிக உணர்ச்சிவசப்பட்டு தகாத, பொய்பிரச்சார ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மத துவேசத்தை ஆதரிக்கிற பதிவுகளை தொடர் மறுபதிவு செய்துவந்ததே.

“எண்ணுடைய பதிவுகளின் நோக்கம், அவர்களின் முகத்திற்கு நேரே கண்ணாடியைக் காட்டுவது மட்டுமே.”

கோவில்களில், மடாலையங்களில் மற்ற இந்துமதம் சார்ந்த தலங்களில் இதுவரையில் கற்பழிப்புச் சம்பவம், கொடூர கொலைகள், குழுந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகள் நடந்ததில்லையா? பலமுறை நடந்திருக்கின்றன, நடந்துகொண்டிருக்கின்றன, அதேசமயத்தில் மசூதிகளிலும், மதரசாக்களிலும், திருச்சபைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா? தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன். இத்தகைய கொடுஞ்செயல் புரிவோர் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படை உண்மை.

ஆசிஃபா கொடூரக் கொலையில் போலீஸ்தரப்பு கொடுத்திருக்கும் வாதம் எந்த ஒரு சாதாரண மனநிலையில் உள்ள மனிதனாலும் நம்பமுடியாத ஒன்று அந்த வாதத்தை வைத்துக்கொண்டு ஒரு பொய்பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் அரசியல் லாபத்துக்காக நடத்த முயல்பவர்கள் அதில் ஆதயம் தேடித்தான் செய்கிறார்கள் அதில் ஏமந்துபோவது என்னவோ சாதாரணமக்கள்தான். அவர்கள் இரண்டு நாட்கள் செய்யும் பொய்பிரச்சாரம், காலங்காலமாக மக்களிடத்தில் பிளவை உண்டாக்கிவிடவே செய்யும். இன்றைய அரசியல் சூழலில் இதுதான் சில கட்சிகளின் தேவை.

இந்த கொடூரர்களை, போலீசாரைத் தாக்கி தப்பமுயன்றனர் என்று சொல்லியாவது சுட்டுக்கொன்றிருக்கவேண்டும். அதைவிடுத்து குழந்தையின் பினத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து பல்வேறு பிரிவிணைசக்திகளைக் கொண்டு, அரசுக்கு எதிரான ஊடகங்கள், எதிர்கட்சிகளின் துணையோடு பிரச்சாரம் செய்வது குற்றத்தின் கொடுமையை திசைதிருப்பி மதப்பிரச்சனையாக்கி, மதவாதிகளை குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசும் சூழலுக்கு இட்டுச்செல்கிறது. இது இதோடு முடிந்துவிடப்போவதில்லை, இந்த முன்னெடுப்பு இனிவரும் குற்றச்செயல்களிலும் தொடரும்.

ஒரு இஸ்லாமியன் ஒரு குழந்தையை பாலியல் வண்புனர்வு செய்து கொலைசெய்தால் அதை வைத்துக்கொண்டு, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள், மதநூல்கள், மதபோதகர்களை கேவலப்படுத்துவதை யாரெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களே ஒரு இந்துவோ அல்லது கிருத்துவனோ இந்த செயலைச் செய்யும் போது அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள், மத உணவுகளைக் கேவலப்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் நாம் நினைவில் கொண்டால் இதுபோன்ற உணர்ச்சிவசப்பட்டு செய்யும் பிரச்சாரங்கள் எதிர்காலத்தில் நடக்காது.

முருகனை மட்டும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற தமிழ்தேசியவாதி ஒருவருக்கும், மதத்தால் இந்து ஒருவருக்கும் சிறிய தர்க்கம், முருகனை ஆதரித்த தமிழ்தேசியவாதி, கிருஷ்ணனை பல்வேறு வசைமொழிகளில் சாட, சாதாரண இந்து முருகனைச் சாடமுடியாது ஏனென்றால் அவர் முருகனையும் வழிபடுவர் அல்லவா? அங்குதான் என்னுடைய இஸ்லாமிய நண்பர் நுழைகிறார், அவர் தமிழ் தேசியவாதிக்கு ஆதரவாக அந்த இந்துவின் உணர்வுகளைச் சாடுகிறார், இதுதான் இன்றைய சூழலில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆக இந்த இந்துதுவேச நாத்திகர்களும், தமிழ்தேசியவாதி என்று அழைத்துக்கொள்பவர்களும், இஸ்லாமியர்களை பல இடங்களில் தங்களுடைய வெறுப்புகளை கக்க பயன்படுத்திக்கொள்வதுபோல இஸ்லாமியர்களும் பலர் தங்களுடைய வெறுப்பைக்காட்ட அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது சாதாரண நடுநிலையாளர்களை மதவாதிகளாக மாற்றிவருகிறது (கூடுமானவரை தமிழ்நாட்டில்). சமூக வலைத்தலங்களில் முகம்தெரியாமல் பலநேரங்களில் இது சாத்தியமாகிறது, பலபேர் பல்வேறு பெயர்களில், பல மதப்பெயர்களில் உலாவந்து வெறுப்பை உமிழ்வார்கள், அதில் மயங்கி உண்மையான முகத்தை கொண்ட முகநூல் நண்பர்கள் தடமாறிவிடக்கூடாது, குற்றங்கள் உலக இயல்பு, அது எல்லா இடங்களிலும் நடக்கிறது, எல்லா மதத்தைச் சார்ந்தவர்களிடமும் நடக்கிறது என்பதை புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தி ஆதயம் தேடுபவர்கள் யார் என்று அறிந்து அவர்களைப் புறந்தள்ளவேண்டும் என்பதுவே

என்னுடைய சமீபத்திய பல பதிவுகளின் உட்கரு.

-பரமன்

Comments

comments