புத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்

வால் எழுத்துக்கள் என்று தமிழறிஞர்களால் இகழப்பட்ட “பெயருடன் சாதிப்பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கம்” இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இல்லை என்று சொல்லலாம். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக குறைந்துவந்து தற்பொழுது அறவே இல்லை என்றநிலையில் உள்ள இவ்வழக்கம், புத்துணர்வு பெற்று, இளஞர்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படும் பழக்கமாக மாறிவருவது குறிப்பிடத்தக்கது.

வீட்டுவிசேசங்களில் பிளக்‌ஷ் போர்டுகளில் தொடங்கி, சமூக ஊடகங்களின் வழி பிரபலமடைந்துவரும் இவ்வழக்கம், தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக பெயர்வைக்கும் பொழுது சாதிப்பெயருடன் சேர்த்துவைக்கும் ஒரு புதிய நடைமுறைக்கு இட்டுச் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.

சாதீய ஏற்றதாழ்வுகளைக் களைய முற்போக்குச் சிந்தனைவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இவ்வழக்கம் தற்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற இனங்களிலும் கூட இளைஞர்கள் தமது சாதிப்பெயரை பெருமையுடன் சேர்த்துக்கொள்கின்ற வழக்கமாக மாறிவருவது சமூகவியலில் ஏற்பட்ட திடீர்மாற்றமா (mutation) என்பது கேள்வி?

Comments

comments