Sustainable Development
இந்தியாவிற்கு தற்போதைய தேவை நீடித்திருக்கிற, நிலையான, எல்லா துறைகளையும் உள்ளடக்கிய, ஒன்றை மொத்தமாக அழித்து மற்றொன்றை வாழவைக்காத ஒரு வளர்ச்சி. ஆங்கிலத்தில் அதை இரண்டே வார்த்தையில் Sustainable Development என்று சொல்லிவிடுகிறார்கள்.
விவசாயத்தில் முன்னேறி இருந்தால் அது வளர்ச்சி, தொழில்துறையில் மேம்பட்டிருந்தல் அது வளர்ச்சி, அடிப்படைக்கட்டுமாணங்களில் உயர்வடைந்திருந்தாலும் அது வளர்ச்சி ஆனால் இயற்கைக்கும், சுற்றுசூழலுக்கும், உலகின் மற்ற உயிரினங்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் அல்லது மிகக் குறைந்த பாதிப்புகளுடன் இந்த வளர்ச்சியை எட்டுவதுதான் இந்த Sustainable Development.
எடுத்துக்காட்டுக்கு,
விவசாயம் செய்தால்மட்டும் போதுமா? சாலைகள் வேண்டாமா? விவசாய விளைபொருட்களை வேகமாக கொண்டுபோய் விற்பனை செய்தால்தான் விவசாயிக்கு நண்மை. விவசாய நிலத்தில் பாதைகள் இல்லாமல் விளைபொருட்களை எங்கனம் வெளியில் கொண்டு சேர்ப்பது. ஆக கொஞ்சம் விவசாய நிலங்களை எடுத்துத்தான் சாலைகள் அமைக்கவேண்டும். விவசாயமும் செழிக்கவேண்டும், சாலைவசதிகளும் மேம்படவேண்டும் இதுதான் Sustainable Development
அதே சமயத்தில் மொத்த விவசாயத்தை அழித்து சாலைகளாகவோ தொழிற்சாலைகளாகவோ மாற்றுவது இல்லை. தொழிற்சாலைகளும் மேம்படவேண்டும் அதே சமயத்தில் இயற்கை பாதுகாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் மேம்படவேண்டும் அதே சமயத்தில் சுற்றுசூழலுக்கு மாசுபடாமல் பாதுகாக்கவேண்டும். தொழிற்சாலைகள் கூடினாலே சுற்றுசூழல் மாசுபடத்தான் செய்யும். அந்த நேரத்தில் அந்த மாசுகளை களைய திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தவேண்டும்.(கழிவுநீர் சுத்திகரிப்பு) அவ்வாறு செய்வதுதான் Sustainable Development
எந்த இடத்தில் மீத்தேன் கிடைக்கிறதோ அந்த இடத்தில் தான் அதை எடுக்கமுடியும். விவசாய இடமாக இருந்தாலும் கூட. எந்த இடத்தில் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் கிடைக்கிறதோ அவ்விடத்திலிருந்தான் அவைகளை எடுக்கமுடியும். இயற்கை தாதுக்களும் எரிபொருட்களும் மனிதசமூகத்திற்கு இன்றியமையாத தேவைகளாக் இருக்கின்றன. ஒன்றில் பெரியது மற்றொன்று அல்ல. ஆக இயற்கை வளங்களை எடுக்கும் பொழுது அவைகளால் பால்படும் மற்ற துறைகளை மேம்படுத்த மாற்றுத் திட்டங்கள் கொண்டுவந்து செயல்படுத்தவேண்டியது அரசின் கடைமை.
ஒரு பல்கலைக்கழகம் கட்டவேண்டுமென்றாலும், 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டால் அது நூறு குடும்பங்களுக்கு பாதகமாகத்தான் அமையும். இருந்தாலும் பல லட்சம் குடும்பங்களுக்கு படிப்பதற்கும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிகளுக்கும் எவ்வளவோ சாதகமாக அமையும்.
தற்காலத்தில் எட்டுவழிச்சாலை, மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை, மற்ற எரிவாயு திட்டங்கள் போன்றவை போலி சமூக ஆர்வலர்களால் பொய்யான செய்திகள் மக்களுக்குப் பரப்பப்பட்டு அவை ஏதோ மக்களுக்கு எதிராக அரசு செய்யும் சதி என்ற மாயையை ஊட்ட முயல்கிறார்கள்.
அதனால் எந்த ஒரு திட்டத்தையும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் உறுதியான, நீண்ட நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சிக்கும் நமது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கும் அவை அஸ்திவாரமாக அமையக்கூடியவை என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டும்.
-பரமன்