போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதித்து சட்டம்.

போக்குவரத்து விதிமீறல்கள், தலைக்கவசம் அணியாதிருத்தல், ஓட்டுனருரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது, வாகனக்காப்பீடு இல்லாமல் இருப்பது போன்றவைக்கான அபராதத் தொகையை உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. அரசு இந்த சட்டங்களை முறையாக அமலாக்கவேண்டும். ஓட்டுனர் உரிமம் பெறும் முறையை மாற்றியமைத்து முறையான பயிற்சி பெற்று, ஓட்டுனர் தேர்வுகளில் வெல்பவர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கவேண்டும். சரியான பயிற்சி பெற்ற வாகனஓட்டிகளால் மட்டுமே சாலைவிபத்துக்களை தவிர்க்கமுடியும்.

பஜக அரசு போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை அதிகரித்துவிட்டது என்று பலர் புலம்பலாம். ஆனாலும் இந்த அபராதத் தொகையை கட்டுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்ப்போம்.

Comments

comments