ஏன் குளிர்கண்ணாடி அணியவேண்டும்?

1. நல்ல தரமான குளிர்கண்ணாடிகள் உங்கள் கண்களை சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களிடமிருந்து நூறு சதவீதம் பாதுகாக்கின்றன. கண்களை மட்டுமன்றி மிகவும் மென்மையான எளிதில் பாதிக்கப்படும் கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளையும் இவை காக்கின்றன அதன் மூலம் சுருக்கம் விழுதல், இளம் வயதிலேயே முதுமைத் தோன்றத்தைப் பெறுதல் போன்வற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.

2.குளிர்கண்ணாடிகள் ஒளிச்சிதரலை குறைக்கின்றன. அனைத்துத் தளங்களும் ஒளியைச் சிதரடிக்கவல்லவை. பொதுவாக தண்ணீர், வாகனங்களின் கண்ணாடிகள் போன்றவை ஒளியைச் சிதரடித்து அவைகளை பல பக்கங்களிலும் பிரதிபலிக்கவல்லவை. இவை மிகவும் ஆபத்தானவை இத்தகைய ஒளிச்சிதரல்களின் பாதிப்பிலிருந்து நமது கண்களை குளிர்கண்ணாடிகள் காக்கின்றன. போலரைஷ்டு பூச்சுக்கொண்ட கண்ணாடிகள் இவ்வாறான ஒளிச்சித்ரல் பிரதிபலிப்பை முற்றிலுமாக குறைத்து நமது பார்வைக்கு ஒரு இனிமையான அனுபவத்தை தருகின்றன.

3.குளிர் கண்ணாடிகள் நமது கண்களை கொடுங்காற்று, தூசிகள், உடைந்து தெரித்து விழும் ஆபத்தான சிதரல்கள் போன்றவற்றிலிருந்தும் காக்கின்றன. கண்களை முழுமையாக மறைக்கக்கூடிய விதத்தில் தயாரிக்கப்படுகின்ற, விளையாட்டில் பயன்படுகின்ற குளிர்கண்ணாடிகள் இவ்வகையில் மிகச் சிறந்தவை.

4.அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை நமது கண்ணின் ஒளித்திரையினால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே நமது கண்ணின் மணிகள் சுருங்கி விரிந்து உள்செல்லும் ஒளியின் அளவை கூட்டியோ அல்லது குறைத்தோ கொடுக்கின்றன. இருளில் அதிகம் விரிந்தும், நல்ல ஒளியில் சுருங்கியும் ஒளியை உள்வாங்குகிறது. அப்படிச் சுருங்கியும் அதிகமான ஒளி உள்செல்லும் நேரத்தில் நமது கண்ணிமைகளும் சுருங்கி மேற்கொண்டு ஒளியைக் குறைத்து உள்செலுத்த உதவுகின்றன. இவ்வாறு நாம் அதிகமாக கண்களுக்கு அழுத்தம் கொடுத்து பார்க்க நேரிடுவதால் நமக்கு தலைவலி மற்றும் கண்களில் வலி மற்றும் சோர்வு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் போதுமான அளவுக்கு ஒளி வடிகட்டப்பட்டு உட்செலுத்தப்படுவதால் கண்களில் நாம் அழுத்தம் கொடுக்கவோ சுருக்கவோ தேவையில்லை. எனவே பார்வை சாதாரணமானதாகவும், கண்களுக்கு இதம் கொடுப்பதாகவும் இருக்கும்.

5. தெளிவான பார்வைக்கு குளிர்கண்ணாடிகள் பெரிதும் உதவுகின்றன. அதிகமான ஒளி எந்த அளவுக்குக் கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றனவோ அதுபோலவே குறைவான ஒளியும். குளிர்கண்ணாடிகள் சரியாண அளவில் ஒளியை வடிகட்டி அணுப்புவதால் தெளிவான பார்வை நமக்கு கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு கண் பாதிப்புகள் வராமல் காக்கப்படும். கோடைகாலங்களில் வாகனங்களை ஓட்டுபவர் மற்றும் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் அதிவிரைவான கண்பாதிப்புகளைத் தவிர்த்து நல்ல தெளிந்த பார்வையோடு வாழலாம்.

-பரமன்

Comments

comments